பவர் ஸ்டார் பவன் கல்யாணின் ஜோடியாகிறார் நித்யா மேனன்.
இரண்டு அதிகாரிகளுக்கு இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டிய மலையாள படம் 'அய்யப்பனும் கோஷியும்'. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து வருகின்றனர். இதில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவர்ஸ்டார் பவன் கல்யாணும், பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் ராணாவும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் அய்யப்பன் மனைவி கண்ணம்மா கதாபாத்திரம் வலுவானது என்பதால் தெலுங்கு ரீமேக்கில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் மனைவியாக நித்யா மேனன் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.