நயன்தாரா விக்னேஷ் சிவன் கலந்துக் கொண்ட கூழாங்கல் திரைப்பட விழா!

நயன்தாரா விக்னேஷ் சிவன் கலந்துக் கொண்ட கூழாங்கல் திரைப்பட விழா!

Update: 2021-02-04 18:28 GMT
விக்னேஷ் சிவன், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இருவரும் காதலித்து வருவதாகவும், இருவரும் இணைந்து 'ரெளடி பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்கள் என்பதும் இந்த நிறுவனத்தின் மூலம் ஒரு சில திரைப்படங்களை அவர்கள் தயாரித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், இருவரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படங்களில் ஒன்று கூழாங்கல். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ரோட்டர்டாம் என்ற நகரில் டைகர் காம்படிஷன் இன்டர்நேஷனல் திரைப்பட விழா என்ற விழா இன்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் 'கூழாங்கல்' திரையிடப்படுகிறது.

அதனை அடுத்து நயன் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.மேலும் பி.எஸ் வினோத் ராஜ் என்பவர் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவான இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த தகவல் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Similar News