பல வருடங்களுக்கு பிறகு தயாரகும் மௌன படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார்.
1987'ம் ஆண்டு வெளிவந்த படம் 'பேசும் படம்' இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இப்படம் வசனங்கள் இல்லாமல் உருவான படம். தற்பொழுது 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு மௌன படம் தயாராகவிருக்கிறது.
இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்கும் இப்படம் 'காந்தி டாக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி, நாயகியாக அதிதிராவ் நடிக்கின்றனர். இதற்கு வசனம் இல்லை என்பதால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இப்படம் வெளியாக உள்ளது.