பிரபல நடிகர் மனைவியுடன் வெளியிட்ட புகைப்படம்: குவியும் வாழ்த்துக்கள்!

பிரபல நடிகர் மனைவியுடன் வெளியிட்ட புகைப்படம்: குவியும் வாழ்த்துக்கள்!

Update: 2021-02-01 17:36 GMT

தமிழ் சினிமாவில் ஜில்லா, மங்காத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மகத்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிக்பாஸ்  இரண்டாம் சீசனில் பங்கேற்று பிரபலமடைந்தார்.இவர் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பதும் அறிந்ததே. மகத் கடந்த ஆண்டு பிரபல மாடல் மற்றும் தொழிலதிபருமான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தநிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் பிப்ரவரி மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்தில் அவரது நண்பர்களான சிம்பு, அனிருத் வேஷ்டி சட்டையில் பங்குபெற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. அதன்பின் கொரோனா ஊரடங்கு காரணமாக மனைவியுடன் இணைந்து  சமூக வலைத்தளத்தில் சில பதிவுகளையும் வெளியிட்டு வந்தார். அந்த வகையில் இன்று திருமண நாள் கொண்டாடும் மகத் மற்றும்  ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளனர். 


 

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பது:நாங்கள் இருவரும் ஒரு அழகிய குழந்தையால் ஆசீர்வதிக்கப் பட்டுள்ளோம். இந்த வருடம் மே மாதத்தில் எங்கள் புதுவரவு இருக்கும். நன்றி பிராச்சி மிஸ்ரா  இந்த சிறந்த பரிசுக்காக. லவ் யூ என்று கூறியுள்ளார். இந்த பதிவை பிராச்சியும் பகிர்ந்து உள்ளார். மேலும் அவரது மனைவிக்கு அன்புடன் முத்தமிடும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News