அருண்விஜய் பகிர்ந்த புகைப்படம்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

அருண்விஜய் பகிர்ந்த புகைப்படம்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

Update: 2021-02-21 18:46 GMT

தமிழ் சினிமாவில் அருண் விஜய் 20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் நிலையில் சினிமாவில் இவர் பெயர் சொல்லும் வகையில் எந்த திரைப்படமும் இவருக்கு அமையவில்லை அதன் பின்  2015 ஆம் ஆண்டு அஜித்துடன் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படம்  மூலம் அதிக ரசிகர்களின் மனதை வென்று  குற்றம் 23,செக்க சிவந்த வானம், தடம் என பல வெற்றி படங்களை கொடுத்தவர்.தற்போது பாக்ஸர், சினம்,அக்னி சிறகுகள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அருண் விஜய் அவரது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் நீண்ட படப்பிடிப்பிற்கு பின்னர் வீடு திரும்பியதாகவும் தன்னுடைய நாய் ருத்ரா அவரை மிகுந்த அன்புடன் வரவேற்றதாகவும், அதன் அளவில்லா அன்பு தன்னை மகிழ்ச்சி அடைய  செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அருண்விஜய் வளர்த்து வரும் 'ருத்ரா' என்ற நாய் அவரை கட்டிப்பிடித்து இருக்கும் இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போது அவருடைய உயரத்துக்கு அந்த நாய் வளர்ந்து உள்ளதும் தெரிய வருகிறது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News