காவல்துறையின் பதவி உயர்வு பெற்ற பிகில் பட வில்லன்.!
காவல்துறையின் பதவி உயர்வு பெற்ற பிகில் பட வில்லன்.!;
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளிவந்து அதிக ரசிகர்கள் மனதை வென்ற படம் பிகில். இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் ஒருவர் காவல்துறையில் அசிஸ்டெண்ட் கமாண்டன்ட் பதவியைப் பெற்று உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியிலும் சினிமா வட்டாரங்களிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் பிகில் திரைப்படத்தில் விஜய்யின் ராயப்பன் கேரக்டரை கொலை செய்யும் அலெக்ஸ் என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகர் 'விஜயன்'. கேரளாவைச் சேர்ந்த இவர் கொம்பன், திமிரு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.மேலும் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் விளையாடி,கேரள காவல்துறையின் கால்பந்தாட்ட அணியில் கலந்து பல கோல்களையும் அடித்து வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் விஜயனுக்கு கேரள காவல்துறை பதவி உயர்வு அளித்துள்ள நிலையில் கேரள காவல் துறையினரிடம் அசிஸ்டெண்ட் கமாண்டன்ட் என்ற பதவி உயர்வை தற்போது பெற்றுள்ளார். இந்த தகவலை அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.இதை அறிந்த விஜய் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.