பொன்னி நதியாக வரும் பொன்னியின் செல்வன் முதல் பாடல் - எப்பொழுது தெரியுமா?

ஜூலை மாத இறுதியில் பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-29 13:19 GMT

ஜூலை மாத இறுதியில் பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





அமரர் கல்கி எழுதிய வரலாற்று புதினமான 'பொன்னியின் செல்வன்' தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ். சரத்குமார் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்க இரண்டு பாக படமாக உருவாகிவிட்டது. அதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.




இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியீடு பற்றிய அறிவிப்பை பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் ஜூலை 31ஆம் தேதி பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடல் பொன்னி நதி என துவங்கும் பாடலாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News