விஜய் பட நடிகைக்கு கொரோனா.. அனைவரையும் டெஸ்ட் எடுக்க வலியுறுத்தும் பூஜா ஹெக்டே.!
எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்.
நடிகர் விஜய் 65வது படத்தில், தெலுங்கு முன்னணி நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த படப்பிடிப்பு கடந்த 10 நாட்களாக ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது. இப்படப்பிடிப்புக்காக பூஜா ஹெக்டெ மற்றும் விஜய்யின் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதனிடையே படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, சென்னை திரும்பியது படக்குழு.
இந்நிலையில், அப்படக்குழுவிற்கு தற்போது புதிய அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. விஜய் படத்தில் நடித்த பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது.
இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.