படப்பிடிப்பு தளத்தில் சுதந்திரமே இல்லை: நடிகை பூஜா ஹெக்டே.!
கொரோனா அனைவரின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது நெல்சன் இயக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், பூஜா ஹெக்டே அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: 'கொரோனாவுக்கு முந்தைய வாழ்க்கை, கொரோனாவுக்கு பிந்தைய வாழ்க்கை என்று கொரோனா அனைவரின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பாக ஜாலியாக சுற்றி வந்தேன். தற்போது நிலைமையில் சுதந்திரமாக சுற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு எல்லோரும் சமம். அந்த நோய்க்கு பணக்காரன், ஏழை என்ற வித்தியாசமே கிடையாது. அனைவரையும் தாக்கும் நிலை உருவாகியுள்ளது. முககவசம் கட்டாயம் அணிந்துகொண்டே செல்ல வேண்டி உள்ளது. எப்போதுதான் முந்தைய நிலை உருவாகுமோ என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.
மேலும், ஏதோ ஒரு தெரியாத பயம் எங்களை பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முன்பு போன்று எங்களால் சுதந்திரமாக சுற்றமுடியவில்லை. படப்பிடிப்பு தளங்களிலும் சுதந்திரம் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.