விஷ்ணு விஷால் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் 2-ம் பாகம் பூஜை!

விஷ்ணு விஷால் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் 2-ம் பாகம் பூஜை!;

Update: 2021-01-18 17:54 GMT

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம்  மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். அந்த வகையில் ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான "இன்று நேற்று நாளை" திரைப்படம் தமிழில் முதல் முதலாக வெளிவந்த டைம் டிராவல் குறித்த இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பதும் இந்த படம் நல்ல வசூல் சாதனையையும்  செய்தது. 

இந்த நிலையில் 'இன்று நேற்று நாளை' படத்தின் 2-ம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கியது. இன்று நடைபெற்ற பூஜையில் நடிகர் விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் ஜிப்ரான், தயாரிப்பாளர் சிவி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய ரவிக்குமாரின் உதவியாளர் பொன்ராஜ் என்பவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகள் கிட்டத்தட்ட அனைவருமே இந்த இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Similar News