பிரபல சீரியல் நடிகை சித்ரா தற்கொலை.. அதிர்ச்சியில் தனியார் தொலைக்காட்சி.!
பிரபல சீரியல் நடிகை சித்ரா தற்கொலை.. அதிர்ச்சியில் தனியார் தொலைக்காட்சி.!;
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடிகை சித்ரா நடித்தவர். தற்போது அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை நடிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு ஆகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சில சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது.
இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ரா சென்னை அடுத்துள்ள நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இன்று அதிகாலை ஓட்டல் ஊழியர்கள் அறை கதவை தட்டியபோது அவர் கதவை திறக்கவில்லை என்று தெரிகிறது.
இதனையடுத்து ஓட்டல் நிர்வாகம் பார்த்தபோது நடிகை சித்ரா தூக்கு போட்ட நிலையில் இருந்துள்ளார். இவரது மரணம் தனியார் தொலைக்காட்சிக்கு மட்டுமின்றி ரசிகர்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.