சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய பிரசாந்த் நீல் - காரணம் இதுவா?
பான் இந்தியா படமாக சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட திரை உலகில் வெற்றி பெற்ற படம் கே.ஜி.எப்.
பான் இந்தியா படமாக சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட திரை உலகில் வெற்றி பெற்ற படம் கே.ஜி.எப். இதன் மூலம் அப்படத்தின் நாயகன் யார் மட்டுமல்ல படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீலும் முன்னணி இயக்குனர் வரிசையில் உயர்ந்தார். மேலும் கடந்த ஆண்டு வெளியான கே.ஜி.எப் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது முதல் பாகம் பெற்ற வெற்றியை விட பிரம்மாண்ட அளவில்.
ஆனால் கே.ஜி.எஃப் 2 படம் வெளியாவதற்கு முன்பே பிரபாஸ் நடிக்கும் 'சலார்' என்கிற தெலுங்கு படத்தையும் இயக்க ஆரம்பித்து விட்டார் மற்றும் இதைத்தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க உள்ளதாகவும் அறிவிப்புகள் வெளியாகிவிட்டது. இந்நிலையில் பிரசாந்த் நீல் அதிரடியாக தனது சோசியல் மீடியா கணக்கை டிஆக்டிவேட் செய்து விட்டு வெளியேறியுள்ளார்.
இயக்குனர் பிரசாந்த் நீலின் இச்செயலால் கன்னடத் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கே.ஜி.எப் ஹீரோவான யாஷின் கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த பிறந்தநாள் வாழ்த்துக்கு, பிரசாந்த் நீல் உருது மொழியில் தெரிவித்திருந்தார். யாஷ்ஷை ரசிகர்கள் கன்னடத்தில் அதிக அளவு நேசிப்பதால் இயக்குனர் பிரசாந்த் நீரில் இந்த உருது பிறந்தநாள் வாழ்த்து கோபத்தியை ஏற்படுத்தியது. இதனால் பலரும் அவரை ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தன மற்றும் அவருக்கு கண்டனங்களையும் தெரிவித்தனர்.
அதுமட்டுமில்லாமல் தெலுங்கு படங்களுக்கே கே.ஜி.எபின் வெற்றிக்கு பிறகு முக்கியத்துவம் கொடுத்து வருவதால் இயக்குனர் பிரசாந்த் நீர் மீது தங்கள் இருந்த கோபத்தையும் இதில் சேர்த்து ரசிகர்கள் காண்பித்து விட்டனர் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் நீல் ரசிகர்களின் இடமிருந்து வெறுப்பு வார்த்தைகளை பெற வேண்டாம் என்று தனது சோசியல் மீடியா கணக்கி விட்டு விலகி விட்டார் என்று கூறப்படுகிறது.