இந்தியாவுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்ட ஏ.ஆர்.ரகுமான்.!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.;

Update: 2021-04-26 05:31 GMT

இந்தியாவில் பெருகி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரு கோடிக்கும் அதிகமானோர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரார்த்தனைகள் இந்தியா என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. ஒரு புறம் சிகிச்சை பலனின்றி தினமும் 500க்கும் மேற்பட்டவர்கள் இறக்கும் நிலை உருவாகியுள்ளது.




 


இதனிடையே மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று அதிகமாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்காக பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர்.




 


அந்த வகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: 'இந்தியாவுக்காக பிரார்த்திப்போம்' என்று பதிவிட்டுள்ளார். அவரது ட்விட்டை பலரும் ரீ ட்விட் செய்து வருகின்றனர்.

Similar News