தனுஷ் படத்தை ஒதுக்கிய பிரியங்கா மோகன், ஏன்?
தனுஷ் படத்தில் நடிக்கவிருந்த வாய்ப்பை முடியாது என விளக்கியுள்ளார் பிரியங்கா மோகன்.
தனுஷ் படத்தில் நடிக்கவிருந்த வாய்ப்பை முடியாது என விளக்கியுள்ளார் பிரியங்கா மோகன்.
சமீபகாலமாக தமிழ் திரையுலகில் பிரியங்கா மக்கள் முன்னணி நடிகையாக வலம் வருகிறார், சிவகார்த்திகேயனுடன் 'டான்' மற்றும் 'டாக்டர்' என இரு படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் மற்றொரு வாய்ப்பாக தனுஷ் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகனை அணுகி உள்ளனர், அவர் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டு தற்போது அந்த படத்தில் இருந்து விலகி உள்ளார். கால்ஷீட் பிரச்சினை இருப்பதால் இந்த படத்தில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளதாக தெரிகிறது.