தனுஷின் கர்ணன் பட அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

தனுஷின் கர்ணன் பட அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்!

Update: 2021-02-09 16:20 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி இந்தி மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'கர்ணன்' திரைப்படத்தின் புரொடக்ஷன் பணிகள்  நடைப்பெற்று வருகின்றன. 


 

இந்நிலையில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவரது சமூக வலைத்தளத்தில் கர்ணன் படத்தின்  அப்டேட் ஒன்றைத் தந்துள்ளார். கர்ணன் படத்தின் டப்பிங் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் தனுஷ் சிறப்பான முறையில் டப்பிங் பணியை முடித்து உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து கிட்டத்தட்ட ரிலீசுக்கு கர்ணன் திரைப்படம் தயாராகி விட்டதாகவே கருதப்படுகிறது.இதை அறிந்த ரசிகர்கள் உற்சாகத்தில் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.



 

இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா நடித்துள்ளார். இப்படத்தில் மேலும் முக்கிய துணை கதாபாத்திரங்களாக  நடிகை லட்சுமி, பிரியா யோகிபாபு மற்றும் மலையாள நடிகர் யால் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்படம் இந்த ஆண்டின் மெகா ஹிட் அடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News