மாஸ்டர் படத்தை வெளியிட தடை.. அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்.!
மாஸ்டர் படத்தை வெளியிட தடை.. அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்.!
நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் வருகின்ற 13ம் தேதி திரைக்கு வரவிருப்பது அனைவரும் அறிந்ததே.
இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், இத்திரைப்படம் தொடர்பாக விஜய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து திரையரங்கில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சட்டவிரோதமாக 400 இணையதளங்கள், 9 கேபிள் டிவிக்களில் இப்படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படம் இணையத்தில் வெளியானால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்று அப்படத்தை வெளியிடும் செவர் ஸ்கிரீன் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்பிற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.