வெளியான விஜயின் வாத்தி பாடலின் ப்ரோமோ.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!
வெளியான விஜயின் வாத்தி பாடலின் ப்ரோமோ.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!;
நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர் ஆகும். இத்திரைப்படம் மிக நீண்ட நாட்கள் கழித்து திரைக்கு வர உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
இத்திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பையும் உண்டாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தினமும் ஒரு புதிய ப்ரோமோ வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது வாத்தி பாடலின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதனை தளபதி ரசிகர்கள் ஆரவாரமாக சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் படம் ஜனவரி 13 அன்று திரையரங்கில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.