பியூட்டி பார்லர் சென்ற ரைஸாவுக்கு இப்படி ஒரு நிலைமையா.. புகைப்படத்தால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் முதன் முறையாக தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் ரைஸா அறிமுகமானார்.;
தமிழ் சினிமாவில் முதன் முறையாக தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் ரைஸா அறிமுகமானார். அதற்கு முன்பாக பிக்பாஸ் சீசன் 1ல் நடித்திருந்தார். இதன் பின்னர் பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் ஜோடியாக நடித்திருந்தார். இதனால் அனைத்து தரப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றார்.
இதன் பின்னர் அடுத்தடுத்த படத்தில் ரைஸாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது 3 படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரைஸா ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். அதாவது சமீபத்தில் ஃபேசியல் செய்வதற்காக அழகுகலை மருத்துவரிடம் சென்றிருந்தேன்.
அவர் எனக்கு தேவையில்லாததை செய்து விட்டார். இதனால் எனது புருவம் வீங்கி விட்டது. இது பற்றி தெரிந்துகொள்ள அழகுகலை மருத்துவரை தொடர்பு கொண்டால் போனை எடுக்காமல் அலை கழித்து வருகிறார் என குறிப்பிட்டுள்ளார். தற்போது ரைஸா வெளியிட்டுள்ள புகைப்படம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.