தனுஷின் புதிய வீட்டு பூமி பூஜையில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்..!
தனுஷின் புதிய வீட்டு பூமி பூஜையில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்..!;
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ்.தற்போது பல படங்களிலும் கமிட்டாகியுள்ளார். அந்த வகையில் அவரது புதிய வீட்டிற்கான பூமி பூஜை இன்று நடந்தது. இந்த பூமி பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டுள்ளார்.
தனுஷ் கட்டும் புதிய வீடு செல்வி ஜெயலலிதா அம்மா இல்லம் இருக்கும் போயஸ் கார்டனில் கட்ட போவதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.இந்த நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று பூமி பூஜை நடைபெற்றது.
இந்த பூமி பூஜையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா உள்பட பட குடும்பத்தார் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் உடல் நலம் சீராகி நன்றாக இருக்கிறார். மேலும் இந்த வீடு கூடிய விரைவில் கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிகிறது.