சின்ன கலைவாணர்.. சமூக சேவகர்.. என் நெருங்கிய நண்பர்.. விவேக் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்.!

வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;

Update: 2021-04-17 04:29 GMT

நடிகர் விவேக் சென்னை, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.




 


இது பற்றி நடிகர் ரஜினினகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "சின்ன கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள்.


 



அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்" எனத் குறிப்பிட்டுள்ளார்.

Similar News