மருத்துவர்கள் நிபந்தனையுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ரஜினிகாந்த்.!
மருத்துவர்கள் நிபந்தனையுடன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் ரஜினிகாந்த்.!;
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அப்படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்துகொண்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதே நேரத்தில் ரஜினிகாந்திற்கு தொற்று இல்லை என படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில், அவருடைய ரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் ஐதராபாத்திலுள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த் 2 நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது உடல் நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதால் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் தற்போது சீராக உள்ளது.
அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக உணர்கிறார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
மேலும், அவருக்கு மருத்துவமனை சார்பாக சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரம் முழு ஓய்வு எடுக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
குறைந்தபட்ச உடற் செயல்பாடு மற்றும் மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டும். மேலும், கொரோனா பாதிப்பு ஏற்படும் சூழல்களையும் தவிர்க்கும் நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.