நள்ளிரவில் ரஜினி பிறந்தநாள்.. போயஸ்கார்டனில் கொண்டாடிய ரசிகர்கள்.!

நள்ளிரவில் ரஜினி பிறந்தநாள்.. போயஸ்கார்டனில் கொண்டாடிய ரசிகர்கள்.!

Update: 2020-12-12 07:25 GMT

நடிகர் ரஜினிகாந்தின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

இதனால், ட்விட்டரில் ‘ஹாப்பி பர்த்டே ரஜினிகாந்த்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.  ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள் பலர், நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடினர். திரைப்பிரபலங்கள் பலரும் ரஜினிகாந்திற்கு ட்விட்டர் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ரஜினி புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ள நிலையில் அவரது பிறந்தநாள் வருவது ரசிகர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளித்து வருகிறது.

ரஜினியின் பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் கோ பூஜை, கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Similar News