'ராம் வாண்ட்டட்' - இணையங்களில் ஹிட் அடிக்கும் 'பஞ்சந்திரம்' ஸ்டைல் 'விக்ரம்' படத்தின் டீஸர்

பஞ்சதந்திரம் ஸ்டைலில் 'விக்ரம்' படத்தின் புதிய பிரமோஷன் வீடியோ ஒன்று வெளியாகி இணையங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2022-05-28 00:45 GMT

பஞ்சதந்திரம் ஸ்டைலில் 'விக்ரம்' படத்தின் புதிய பிரமோஷன் வீடியோ ஒன்று வெளியாகி இணையங்களில் வைரலாகி வருகிறது.



20 ஆண்டுகளுக்கு முன்பு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயராம், ரமேஷ் அரவிந்து, ஸ்ரீமன், யுகி சேது ஆகியோர் இணைந்து நடித்த படம் 'பஞ்சதந்திரம்'. ஒரு சுவாரசியமான கதையம்சம் மற்றும் பரபரப்பான திரைக்கதையை கொண்ட இப்படம் மிகவும் வெற்றியடைந்த படம். இப்பொழுதுகூட இப்படத்தை கொண்டாட தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.




இந்நிலையில் வரும் ஜூன் 3ம் தேதி வெளியாகவிருக்கும் 'விக்ரம்' படத்தின் பிரமோஷன் வேலையில் 'பஞ்சந்திரம்' பட குழுவினர் இறங்கியுள்ளனர். 'பஞ்சந்திரம்' படத்தில் வரும் கான்ஃபரன்ஸ் கால் காட்சியை அப்படியே 'பஞ்சந்திரம்' ஸ்டைலில் விக்ரம் படத்திற்காக பயன்படுத்தி கதாநாயகன் கமலஹாசனை தேடுவது போன்று காட்சிப்படுத்தியுள்ளனர் இந்த டீஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Similar News