படமாகிறது ராமாயணம்: சீதையாக சாய்பல்லவி

புதியதாக உருவாக இருக்கும் ராமாயணம் திரைப்படத்தில் சாய் பல்லவி சீதையாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2023-08-29 10:30 GMT

ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டு உள்ளனர். தமிழ் தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற பெயரில் வெளியான ராமாயண படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும் நயன்தாரா சீதையாகவும் நடித்திருந்தனர் . ஆதிபுருஷ் என்ற பெயரில் தயாரான ராமாயண படத்தில் ராமராக பிரபாஸ் , சீதையாக கீர்த்திசனோனும் ராவணனாக சயீப் அலிகான் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது தமிழ் ,தெலுங்கு , ஹிந்தி மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் இன்னொரு ராமாயண படமும் தயாராக உள்ளது .


பாகுபலி கிராபிக்ஸ் காட்சிகளை மிஞ்சும் வகையில் அதிக பொருள் செலவில் மூன்று பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர் .நித்திஷ் திவாரி டைரக்ட் செய்கிறார் .அல்லு அரவிந்த் மது மந்தெனா ஆகியோர் தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் ராமராக ரன்வீர் கபீரும் சீதையாக அலியாபட்டும் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது .ஆனால் கால்சீட் பிரச்சினைகளால் படத்தில் இருந்து அலியா பட் விலகி விட்டார். இதை எடுத்து அலியாபட்டுக்கு பதிலாக சீதை வேடத்தில் நடிக்க சாய் பல்லவியை படக்குழுவினர் பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சாய்பல்லவியும் ராமாயணம் படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிற

Similar News