லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராம் சரண் - எப்பொழுது ஆரம்பம்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கவிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கவிருக்கிறார்.
சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்ததை முன்னிட்டு தென்னிந்தியாவின் முக்கியமான இயக்குனராக உயர்ந்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது, தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவுடன் ஒரு கதை சொல்லி இருப்பதாகவும் அவருக்கும் அந்த கதை பிடித்துள்ளதால் விரைவில் நடிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் ராம் சரண் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தை பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.