எல்லாம் பிசிக்ஸ் வொர்க் அவுட் ஆனதுதான் கரணம் - ஜூனியர் என்.டி.ஆர் நட்பு குறித்து ராம்சரண் கூறிய சுவாரசியம்
கடந்த வருடம் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் சமம் முக்கியத்துவம் வாய்ந்த
கடந்த வருடம் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரும் சமம் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் இணைந்து நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றனர். இவர்கள் இருவரும் படத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் தெலுங்கு திரை உலகில் இருவரது குடும்பத்திற்கும் கடந்த மூன்று தலைமுறைகளாக ஒரு பகை இருப்பது போன்ற தோற்றம் நிலவி வருகிறது.
பொதுவாக சினிமாவில் நாயகன் நாயகி மட்டுமல்லாமல் இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் போது அவர்களது காம்பினேஷன் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றால் அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி அழகாக ஒர்க் அவுட் ஆனது என்று சொல்வார்கள். ஆனால் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தனக்கும் ராம்சரனுக்குமான நட்பில் பிசிக்ஸ் வொர்க் அவுட் ஆகி உள்ளது என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் விஜய் அஜித் ரசிகர்கள் மோதிக் கொள்வதைப் போல தெலுங்கு திரை உலகில் சமீபத்தில் வெளியான பாலகிருஷ்ணாவின் வீரசிமாரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா இரு படங்களும் வெளியாகி கருத்து மோதல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் இருவரிடமும் ஒரு பேட்டியில் மூன்று தலைமுறை பகையும் தாண்டி எப்படி உங்களால் நட்புடன் இருக்க முடிகிறது என்று கேட்கப்பட்டது.
இதற்கு ராம்சரண் ஒருபுறம், நீண்ட காலமாக எங்களது குடும்பத்திற்குள் பகை இருப்பது போல் பேசப்பட்டு வருவது என்னை வருத்தப்படச் செய்தது. அதுமட்டுமல்ல எங்கள் இருவருக்கும் இடையே உள்ள போட்டி தான் எங்களை நட்பாக்கியது என்று பதிலளித்துள்ளார். மற்றொருபுறம் ஜூனியர் என்.டி.ஆர், எப்படி காந்தத்தின் எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்றே ஈர்க்கும் என இயற்பியலின் சொல்லப்பட்டுள்ளதோ அதேபோல்தான் எங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ள எதிர்குணங்கள் எங்களது நட்பை எளிதாக்கிவிட்டன என்று புதிய கோணத்தில் தனது பதிலை அளித்துள்ளார்.