ரம்யா: இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருக்கிறதா.?
ரம்யா: இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இருக்கிறதா.?;
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ப்ரீஸ் டாஸ்க் நடக்கிறது. போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக, கடந்த சீசனை போலவே இப்போதைய சீசனிலும் வருகை தர உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ஷிவானியின் தாயார் மற்றும் பாலாஜியின் சகோதரர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்த நிலையில் இன்றைய முதல் ப்ரோமோவில் ரம்யாவின் சகோதரர் மற்றும் அம்மா பிக்பாஸ் வீட்டிற்கு வரும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ரம்யா தனது அம்மாவைப் பார்த்தவுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு என்னோட பேட்டரி வந்திருக்கிறார் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார். ரம்யா குறித்து சக போட்டியாளர்களுடன் அவருடைய தாயார் கூறிய போது அவள் எப்போதுமே அழற டைப் கிடையாது என்று கூறுகிறார். அப்போது சோம் ஆனா அழ வைப்பாங்க என்று காமெடியுடன் கூறுகிறார். இதனையடுத்து நீங்கள் உங்கள் மனதில் உள்ளதை ஓப்பனாக பேசிக் கொள்ளுங்கள் என்றும், யாரும் யாரையும் கம்ப்ளைண்ட் பண்ண வேண்டாம் என்றும் அனைவருக்கும் அறிவுரை கூறுகிறார்.
இந்த நிலையில் ரம்யாவிடம் அவரது சகோதரர் இந்த வாரம் ஒரு வேளை டபுள் எவிக்சன் நடந்து நீ வெளியேறினால் அதற்கு காரணம் நீ கிடையாது என்று கூறியபோது ரம்யா ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியுடன் வெளிய வர்ற நிலைமை இருக்கா என்று கேட்பதுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வருகிறது. மேலும் இன்றைய நிகழ்ச்சியில் என்னதான் நடக்கிறது என்று பொருமையாக பார்ப்போம்.
#Day87 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/8D6wpzZGp3
— Vijay Television (@vijaytelevision) December 30, 2020