விக்ரம் ஜோடியாக ராஷ்மிகாவா?எந்த படத்தில் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் ராஷ்மிகா அடுத்து புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் ரஷ்மிகா தமிழில் விஜய்க்கு ஜோடியாக வாரிசு, கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்திருந்தார் .தெலுங்கு, இந்தி படங்கள் தாண்டி விரைவில் தமிழ் படங்களில் நடிக்கப்போவதாக சமீபத்தில் ராஷ்மிகா சூசகமாக கருத்து தெரிவித்திருந்தார். தமிழில் புதிய படத்தில் ராஷ்மிகா கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மலையாளத்தில் ஓம் சாந்தி ஒசானா, ஒரு முத்தாசி கதா, சாராஸ், 2018 ஆகிய படங்களை டைரக்ட் செய்த இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கிய புதிய படத்தில் விக்ரம் ஜோடியாக ராஷ்மிகா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் வில்லன் இடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறதாம். தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கும் இந்த படம் அதிரடி ஆக்ஷன் கதை என்று கூறப்படுகிறது. ராஷ்மிகா மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி கொள்ளச் செய்திருக்கிறது.
SOURCE :DAILY THANTHI