'தலைவி' படத்தின் ரிலீஸ் தேதி: கங்கனா ரனவத் வெளியிட்ட அறிவிப்பு!

'தலைவி' படத்தின் ரிலீஸ் தேதி: கங்கனா ரனவத் வெளியிட்ட அறிவிப்பு!;

Update: 2021-02-25 18:39 GMT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அவரது வாழ்க்கையை மையமாக வைத்து  எடுக்கப்பட்ட படம் தலைவி. இப்படத்தின் ரிலீஸ் தேதியை நடிகை கங்கனா ரனாவத் அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 

மேலும் இது குறித்த வீடியோ பதிவை டுவிட்டரில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இந்த பதிவில் அவர் 'தலைவி' திரைப்படம் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.


இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக கருணாநிதி கேரக்டரில் பிரகாஷ்ராஜ், சோபன்பாபு கேரக்டரில் ஜிஷ்ஷூ செங்குப்தா, சசிகலா கேரக்டரில் பூர்ணா, ஜானகி ராமச்சந்திரன் கேரக்டரில் மது, ஜெயலலிதாவின் தாயார் சந்தியா கேரக்டரில் பாக்யஸ்ரீ, ஆர்.எம்.வீரப்பன் கேரக்டரில் சமுத்திரக்கனி மற்றும் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமியும் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்துள்ள இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். ஜிவி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News