விஷாலின் 'சக்ரா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: தியேட்டரில்? ஒடிடியில்?

விஷாலின் 'சக்ரா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: தியேட்டரில்? ஒடிடியில்?

Update: 2021-01-24 18:00 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் பல படங்களில் நடித்து பல படங்கள் மெகா ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் தற்போது நடித்து முடித்துள்ள படம் 'சக்ரா'. ரிலீசுக்கு சில மாதங்களுக்கு முன்னரே தயாராகி விட்டது என்றாலும் இந்த படம் குறித்த வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் இருந்ததால் இந்த படத்தின் ரிலீஸ் தாமதம் ஆனது. தற்போது நீதிமன்றம் ரிலீஸ் செய்ய அனுமதி அளித்துவிட்டதை அடுத்து ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளன.

முதலில் 'சக்ரா' ஓடிடியில் ரிலீஸாகும் என்று கூறப்பட்டது என்பதும் முன்னணி ஓடிடி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  எனவே தற்போது விஜய்யின் 'மாஸ்டர்' மற்றும் சிம்புவின் 'ஈஸ்வரன்' ஆகிய இரண்டு படங்களும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட விஷால் முடிவு செய்துள்ளார்.  இந்நிலையில் சற்று முன் ரிலீஸ் தேதி பிப்ரவரி-12 என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் பிப்ரவரி 12-முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக ஷ்ராதா ஸ்ரீநாத்,ஸ்ருஷ்டி டாங்கே, ஷ்ராதா ஸ்ரீநாத்,விஷால், ரெஜினா, மனோபாலா ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எம்எஸ் ஆனந்தன் இயக்கியுள்ள இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது. விஷால் ரசிகர்கள் ரிலீஸ் தேதியை அறிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

Similar News