தலைவி படத்தின் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகைப்படங்கள் வெளியீடு!

தலைவி படத்தின் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகைப்படங்கள் வெளியீடு!;

Update: 2020-12-24 16:32 GMT

தமிழ் சினிமாவின் ஆரம்பத்தில் அதிக ரசிகர்களை கொண்டவர் எம்ஜிஆர்.அந்த வகையில்  இவரின் நினைவை மீண்டும் தூண்டும் விதமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான 'தலைவி' படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்த்சாமியும் நடித்து உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே அறிந்ததே. இந்த நிலையில் இன்று எம்ஜிஆர் நினைவு நாளை அடுத்து அரவிந்த்சாமி நடித்த எம்ஜிஆர் கேரக்டர் குறித்த ஸ்டில்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர்.

அதன் படி சற்று அரவிந்த்சாமி தனது சமூக வலைத்தளத்தில் தனது கேரக்டரான எம்ஜிஆரின் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். அதில் அச்சு அசலாக அவர் எம்ஜிஆர் போன்று இருப்பதும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது எம்ஜிஆரே உயிரோடு திரும்பி வந்துவிட்டது போல் இருப்பதாகவும் நெட்டிசன்கள் மற்றும் எம்ஜிஆரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அரவிந்தசாமி கூறியபோது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்தது ஒரு மரியாதை மட்டுமல்ல, ஒரு பெரிய பொறுப்பும் கூட. இந்த பொறுப்பை வழங்கி என் மிது நம்பிக்கை வைத்த இயக்குனர் ஏ.எல்.விஜய் தயாரிப்பாளர்களுக்கு நன்றி கூறுகிறேன் என்று கூறியுள்ளார். இப்படத்தில் அரவிந்த்சாமி  புரட்சித்தலைவர் போலவே இருப்பது  அவருக்கு நல்ல வரவேற்பு பெறும் என்று ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


 


 

Similar News