ஆரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரியோ - காரணம் என்னவாக இருக்கும்?

ஆரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரியோ - காரணம் என்னவாக இருக்கும்?;

Update: 2021-01-12 17:10 GMT

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றிலிருந்து  போட்டியாளர்களான அர்ச்சனா, நிஷா, ரமேஷ் மற்றும் ரேகா வந்திருந்த நிலையில் இன்றைய முதல் புரோமோவில் சம்யுக்தா மற்றும் சுசித்ரா ஆகியோர் வந்திருந்தனர். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள இரண்டாவது புரமோவின்படி ஆஜித், சனம்ஷெட்டி, வேல்முருகன் ஆகியோர்களும் சிறப்பு விருந்தினராக வந்திருக்கின்றனர்.எனவே வீட்டில் மொத்தம் 15 பேர் தற்போது உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அனிதா, சுரேஷ் மற்றும் ஷிவானி ஆகிய மூவர் மட்டுமே இல்லை என்பதும் மூவரும் விரைவில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் இன்றைய டாஸ்க் ஒன்றில் ஏற்பட்ட சிறிய மனஸ்தாபம் காரணமாக ஆரி மற்றும் ரியோ ஆகிய இருவரும் மாறி மாறி மன்னிப்பு  கேட்டுக்கொண்ட காட்சிகளும் உள்ளன மீண்டும் பிக்பாஸ் வீட்டில் கூட்டம் அதிகமாகி உள்ளதால் பிரச்சினைகளும் அதிகரிக்குமா என்பதை பார்ப்போம்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் அன்பு குருப்பினால் ரியோக்கு திமிரு அதிகம் ஆகிவிட்டது என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.மேலும் இது பற்றிய முழுமையான தகவலை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.

Similar News