ரியோ மனைவிக்கு ரம்யா மீது இவ்வளவு கடுப்பா?

ரியோ மனைவிக்கு ரம்யா மீது இவ்வளவு கடுப்பா?

Update: 2020-12-30 19:11 GMT

பிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு ப்ரீஸ் டாஸ்க் நடைபெறுகிறது.நேற்று ஷிவானியின் அம்மா மற்றும் பாலாஜியின் சகோதரர் வந்த நிலையில் இன்றைய முதல் புரமோவில் ரம்யாவின் தாயார் மற்றும் சகோதரர் வந்திருந்த காட்சிகள் காட்டப்பட்டன.இந்த நிலையில் தற்போது இரண்டாவது புரமோவில் ரியோவின் மனைவி ஸ்ருதி பிக்பாஸ் வீட்டிற்குள் வருகிறார்.

காதலே காதலே என்ற பின்னணி பாடலுடன் வரும் மனைவியை கட்டியணைத்து ரியோ அழும் காட்சிகள் சென்டிமென்டின் உச்சமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஹவுஸ்மேட்ஸ்களுடன் ஸ்ருதி பேசியபோது நண்பர்களின் கடுப்பு என்ற கூறி ஒரு எபிசோடில் நீ பாட்டுக்கு குடுகுடுன்னு ஓடிப்போய் ரம்யாவை அலேக்காக தூக்கியதுதான் நண்பர்களின் கடுப்பு என்று சொல்ல, அதற்கு ரியோ, இது நண்பர்களின் கடுப்பு மாதிரி தெரியலையே என்று ஸ்ருதியை கிண்டலுடன் பார்ப்பது ரம்யா உள்பட ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் கலகலப்பாக்கியது.

இருப்பினும் ரியோவின் குழந்தை பிக்பாஸ் வீட்டிற்கு வராமல் இருந்தது ரியோ உள்பட அனைவருக்கும் ஏமாற்றமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இன்னும் கலகலப்பான நிகழ்ச்சிகளும் அரங்கேறும் என்று ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.

Similar News