மிருகம் - 2 படத்தில் நடிக்கும் ஆர்.கே சுரேஷ்.!
மிருகம் - 2 படத்தில் நடிக்கும் ஆர்.கே சுரேஷ்.!;
இயக்குனர் சாமி இயக்கிய 2007-ஆம் ஆண்டு வெளியான படம்தான் மிருகம் இந்த படத்தில் அறிமுக நடிகராக ஆதி நடித்திருந்தார்.அவருக்கு ஜோடியாக பத்மப்பிரியா நடித்தார்.இப்படத்தினை மீண்டும் எடுக்க முடிவு செய்துள்ளனர்.
அந்த வகையில் மிருகம் 2-வில் ஆர்.கே சுரேஷ் கதாநாயகனாக நடிப்பதாக அதிகாரபூர்வமான தகவல் வெளிவந்துள்ளது.மிருகம் படத்தின் கதை எய்ட்ஸ் உலகிலேயே மிகக் கொடிய நோயாக கருதப்படும் எய்ட்ஸ் நோயை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும்.இந்தியாவில் 1987 ஆண்டுகளின் காலக்கட்டத்தில் பரவத்தொடங்கியது.இதுபற்றி மீண்டும் விழிப்புணர்வு தருவதற்காக பார்ட்-2 எடுக்க வருகின்றனர் இயக்குனர் சாமி.
இதுபற்றிய தகவலை ஆர்.கே சுரேஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மிருகம்2 படத்தில் தான் கதாநாயகனாக நடிக்கப் போவதாகவும், அதற்கான பூஜை நடைபெற்றதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இப்படத்தினை இயக்கிய இயக்குநர் சாமி உயிர், சிந்து சமவெளி, கங்காரு உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார். இவரது அனைத்துப் படங்களுமே சர்ச்சையை கிளப்பியுள்ளன.இந்த படம் எவ்வாறு சர்ச்சையைக் கிளப்பும் என்று பார்க்கலாம்.