டைம்ஸ் ஸ்கொயரில் ஒளிபரப்பாகிய மாதவனின் 'ராக்கெட்ரி -நம்பி எபெக்ட்'

அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயரில் மாதவன் நடித்த ராக்கெட்ரி திரைப்படத்தின் ட்ரெய்லர் ஒளிபரப்பப்பட்டது.

Update: 2022-06-15 01:47 GMT

அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயரில் மாதவன் நடித்த ராக்கெட்ரி திரைப்படத்தின் ட்ரெய்லர் ஒளிபரப்பப்பட்டது.



மாதவன் நடித்து, தயாரித்து, இயக்கியுள்ள படம் 'ராக்கெட்ரி -நம்பி எபெக்ட்' இப்படம் ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு பின்பு நிரபராதி என நிரூபிக்கப்பட்ட ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையாகும்.




 

இப்படத்தை மாதவன் கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் விளம்பரப்பலகையான அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் அமைந்துள்ள நாஸ்டாக் டிஜிட்டல் விளம்பரப்பலகை ஒளிபரப்பப்பட்டது. அப்பொழுது ஏராளமான இந்தியர்கள் அதை கண்டு களித்தனர், அவர்களுடன் மாதவனும், நம்பி நாராயணன் அவர்களும் கண்டு களித்தனர். 

Similar News