சாதனையின் உச்சத்தை தொட்ட 'ரவுடி பேபி' பாடல்!
'Rowdy Baby' a song in 'Maari 2' reached a Great milesstone.
தமிழ் சினிமாவில் இதுவரை எந்த பாடலும் தொடாத உச்சத்தை 'ரவுடி பேபி' பாடல் தொட்டுள்ளது.
இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில், தனுஷ், சாய் பல்லவி நடித்த படம் 'மாரி 2', இப்படத்தில் ரவுடி பேபி' பாடல் இந்திய அளவில் பல சாதனைகள் படைத்து வருகிறது.
தற்போது யூ ட்யூப்'ல் இந்த பாடல் 1200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 1100 மில்லியன் சாதனையைக் கடந்த இப்பாடல், அடுத்த ஐந்து மாதங்களுக்குள் மேலும் 100 மில்லியன் பார்வைகளைப் பெற்று இப்போது 1200 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்த பெருமை தமிழ் சினிமாவில் வெளியாகிய எந்த ஒரு பாடலுக்கும் கிடைக்காததாகும். சராசரியாக தினமும் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகள் இப்பாடலுக்கு கிடைத்து வருகிறது.