இந்து மதத்தை அழிக்க நினைத்தால் என்னை மாதிரி ஒருவர் வருவார்கள்! மோகன் ஜி அதிரடி பேட்டி!
நாடக காதலுக்கு எதிராக திரௌபதி படத்தை இயக்கிய மோகன் ஜி தற்போது ருத்ர தாண்டவம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில வெளியாகி மதமாற்றம் செய்யும் கும்பலின் வயிற்றில் புளியை கரைத்தது.
நாடக காதலுக்கு எதிராக திரௌபதி படத்தை இயக்கிய மோகன் ஜி தற்போது ருத்ர தாண்டவம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில வெளியாகி மதமாற்றம் செய்யும் கும்பலின் வயிற்றில் புளியை கரைத்தது.
இப்படத்திற்கு மதமாற்ற கும்பல்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால், அவர்கள் படத்தை எப்படியாவது திரையிட விடாமல் செய்ய வேண்டும் என்று பல்வேறு வழிகளில் முயற்சி செய்தனர். ஆனால் அதனை தாண்டி ருத்ர தாண்டவம் அக்டோபர் 1ம் தேதி திட்டமிட்டப்படி திரைக்கும் வரும் என்று அப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், ருத்ரதாண்டவம் படத்தில் கவுதம் மேனன், ராதாரவி, தர்ஷா குப்தா உள்ளிட்ட பல திரைபிலங்கள் நடித்துள்ளனர். இதனிடையே படத்தின் இயக்குநர் மோகன் ஜி செய்தியாளர்கள் மத்தியில் பேசியதாவது: ருத்ரதாண்டவம் படத்தில் ரிச்சர்ட் ஜோடியாக நடிக்க 8 நடிகைகளிடம் பேசினேன். அவர் முன்னணி நடிகர் இல்லை என்பதால் நடிக்க மறுத்துவிட்டனர். 'குக்வித் கோமாளியில் வந்த தர்ஷாவின் திறமையை பார்த்து இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கினேன்.
இப்படத்தில் இயக்குநர் ராதாரவி, இயக்குநர் கவுதம் மேனன் இடையேயான காட்சிகள் நிச்சயம் வரவேற்பை பெறும். மதமாற்றம் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை இந்த படத்தில் தோலுரித்து காட்டியுள்ளேன். பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படத்தை தயாரித்துள்ளேன். மேலும் ரூ.43 லட்சம் முதலீட்டில் உருவான திரௌபதி படம் 20 மடங்கு வசூலை பெற்றது. அந்த படம் வெற்றிக்கு பின்னர் இந்த படத்தை இயக்கியுள்ளேன்.
இந்து மதத்தை அழித்து விடுவேன் என்று சொல்லி மேடைளில் கை தட்டல் வாங்கிச் செல்லும் கும்பல் பின்னணியில் உள்ள கார்ப்பரேட் அரசியலை வெளிப்படுத்தும் விதமாக இந்த கதையை உருவாக்கி இருக்கிறேன். திரௌபதி படத்துக்கு சம்பளம் வாங்காமல் 8 மாதங்கள் நடித்து கொடுத்தவர் ரிச்சர்ட். அவரே இப்படத்திலும் நடிகர். எனக்காக குறைவான சம்பளம் வாங்கி நடித்தார் ராதாரவி. அவர் வக்கீலாக வருகிறார். கவுதம்மேனனும் மறுக்காமல் நடித்து கொடுத்துள்ளார்.