சார்பட்ட பரம்பரை படக்குழுவினரை அழைத்து வெகுவாக பாராட்டிய உலகநாயகன் !

படக்குழுவினருடன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

Update: 2021-08-07 03:00 GMT

சமீபத்தில் ஓ.டி.டி தளத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தை பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன் படக்குழுவினரை அழைத்து பாராட்டியுள்ளார்.




 


சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஓடிடியில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா, பசுபதி, துஷாரா உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சினிமா கலைஞர்கள் மட்டுமின்றி பெருவாரியான ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.




 


இந்நிலையில் இப்படத்தை பார்த்த கமல் படத்தை வெகுவாக பாராட்டியதுடன் படக்குழுவினரையும் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும், "இப்படத்தின் நடிகர்களின் கதாபாத்திரங்கள் பெயர் ரசிகர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு அப்படியே ஞாபகம் இருக்கும் அந்தளவிற்கு அவர்கள் ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளனர்" என படக்குழுவினருடன் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

Similar News