திருக்கடையூரில் இளையராஜாவிற்கு சதாபிஷேக விழா, குடும்பத்துடன் பங்கேற்பு
திருக்கடையூர் கோவிலில் இளையராஜாவிற்கு சதாபிஷேகம் விழா நடைபெறுகிறது.
திருக்கடையூர் கோவிலில் இளையராஜாவிற்கு சதாபிஷேகம் விழா நடைபெறுகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தேவாரப்பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 60, 70, 80 வயதை பூர்த்தி செய்தவர்களுக்கு மணிவிழா, பீமரதசாந்தி, விஜயரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், ஆயுள் விருத்தி ஆகிய ஹோமங்களை செய்து வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில் 80 வயதை பூர்த்தி செய்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா திருக்கடையூர் அபிராமி கோவிலுக்கு வருகை புரிந்தார். மேலும் அங்கு கோ பூஜை மற்றும் கஜ பூஜை செய்தால் இதில் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா, மகள் பவதாரணி, சகோதரர் கங்கை அமரன், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.