சல்மானுக்கு துப்பாக்கி லைசன்ஸ், குண்டு துளைக்காத கார் - எதற்கு இதெல்லாம்?

தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் பெற்றுள்ளார் சல்மான்கான்.

Update: 2022-08-02 11:47 GMT

தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் பெற்றுள்ளார் சல்மான்கான்.




 

பாலிவுட்டின் வசூல் நாயகனும், சர்ச்சை நாயகனுமான சல்மான்கானுக்கு மும்பை போலீஸ் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி வழங்கி உள்ளது. 2007 ஆம் ஆண்டு மானைக் கொன்ற வழக்கில் சல்மான்கான் சிக்கியதில் இருந்து அவருக்கு பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ் நாயக்கம்மால் மூலம் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் தனது சொந்த பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள மும்பை போலீஸிடம் லைசன்ஸ் கேட்டு சல்மான் கான் விண்ணப்பித்திருந்தார்.




 



இந்நிலையில் சல்மான் கான் அவரது பின்னணி ஆகியவற்றை விசாரித்து லைசன்ஸ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் சல்மான் கான் அச்சத்தின் காரணமாக தான் வழக்கமாக பயன்படுத்தும் காரை துப்பாக்கி தோட்டாக்கள் துளைக்க முடியாத புல்லட் ப்ரூப் காராக மாற்றியுள்ளதாகவும் தெரிகிறது.

Similar News