துல்கருக்கு ஜோடியாகும் சமந்தா - எந்த படம் தெரியுமா?
துல்கர் சல்மான் ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார்.
துல்கர் சல்மான் ஜோடியாக சமந்தா நடிக்கவிருக்கிறார்.
துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் உருவாகி சமீபத்தில் வெளியான 'சீதாராமம்' படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது துல்கர் சல்மான் அடுத்த படப்பிடிப்பை துவங்கவிருக்கிறார். செப்டம்பரில் 'கிங் ஆப் கோதா' என்ற படம் துவங்க இருக்கிறது அபிலாஷ் ஜோஷி என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.
இந்த நிலையில் படத்தில் கதாநாயகியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகி இருக்கிறார். இது குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் தெரிவிக்கப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளன.