தொகுப்பாளினியாக களமிறங்கும் சமந்தா - சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

தொகுப்பாளினியாக களமிறங்கும் சமந்தா - சம்பளம் எவ்வளவு தெரியுமா.?;

Update: 2020-11-17 17:00 GMT

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

  அந்தவகையில் முதன்முதலாக தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜயதசமி நாளை முன்னிட்டு ஒரு எபிசோடை தொகுத்து வழங்கினார்.அதனால் இவருக்கு பெரும் ஆதரவும் கிடைத்தது.இந்த நிலையில் தற்போது பிரபல டாக் ஷோ மூலம் தொகுப்பாளினியாகவும் சமந்தா களமிறங்க உள்ளார். தெலுங்கில் ஒளிபரப்பாக உள்ள 'சாம் ஜாம்' எனும் டாக் ஷோவை சமந்தா தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் முதல் விருந்தினராக நடிகர் விஜய் தேவர்கொண்டா கலந்து கொண்டுள்ளார்.மேலும்  டாக் ஷோவில் சமந்தா 10 எபிசோட்களை தொகுத்து வழங்கவுள்ளார். அதற்காக இவர் ரூ.1.5 கோடி சம்பளமாக வங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு தெலுங்கு ரசிகர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Similar News