நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி.!
ஜெயம் ரவியின் ‘கோமாளி’ பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெயம் ரவியின் 'கோமாளி' பட நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ், கன்னட மொழிகளில் அதிகமான படங்களில் நடித்து வருபவர் சம்யுக்தா ஹெக்டே, இவர் தமிழில் 'பப்பி', 'வாட்ச்சேன்', 'கோமாளி', உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதிலும் ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் நடிக்கும்போது, தமிழில் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில், நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். இவரது பெற்றோர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.