சந்தானம் நடித்த ‘‘பாரிஸ் ஜெயராஜ்’’ டிரெய்லர் இன்று மாலை வெளியீடு!
சந்தானம் நடித்த ‘‘பாரிஸ் ஜெயராஜ்’’ டிரெய்லர் இன்று மாலை வெளியீடு!;
கொரோனா தொற்று காலத்தில் நடிகர் சந்தானம் படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது அவரது புதிய படத்திற்கான டிரெய்லர் வெளியாக உள்ளது.
இந்நிலையில், ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ‘‘பாரிஸ் ஜெயராஜ்’’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லார்க் ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு ‘‘மக்களிசை நாயகன்’’ சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் கதை வித்தியாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. டிரெய்லர் வெளியாவதால் சந்தானம் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுக்கு பின்னர் திரைத்துறையினரின் வேலைகள் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக வீடுகளில் முடங்கியிருந்த திரைத்துறையினர் தற்போது வெளியுலகில் தலை காட்ட ஆரம்பித்துள்ளனர். நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வெளியாகி அமோக வசூலை எடுத்து வருகிறது. அதே போன்று நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படமும் வசூலில் சாதனை படைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.