வடக்குப்பட்டி ராமசாமியாக வரும் சந்தானம்
2015 சந்தானம் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறி தொடர்ச்சியாக ஹீரோவாக படங்களில் பயந்து வருகிறார்.
2015 சந்தானம் காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக மாறி தொடர்ச்சியாக ஹீரோவாக படங்களில் பயந்து வருகிறார். தற்போது கிக் படம் அவர் நடிப்பில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில் நடிகர் சந்தானம் மீண்டும் காமெடி வேடம் ஏற்கவும் தயாராகி வருகிறார்.
சுந்தர் சியின் அரண்மனை 4 பாடத்திலும் அஜித்தின் 62 வது படத்திலும் அவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்த போதிலும் அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய பட அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது.
டிக்கிலோனா என்ற படத்தில் சந்தானத்தை வைத்து ஏற்கனவே இயக்கிய கார்த்திக் யோகியின் இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் நடிக்கிறார். காமெடி கதையை முழுக்க முழுக்க மையமாக வைத்து தயாராகிறது. மற்ற நடிகர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. மேலும் இப்படத்திற்கு வடக்குப்பட்டி ராமசாமி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.