சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை நிறைவு.. அண்ணனிடம் உடல் ஒப்படைப்பு.!

சின்னத்திரை நடிகை சித்ராவின் பிரேத பரிசோதனை நிறைவு.. அண்ணனிடம் உடல் ஒப்படைப்பு.!

Update: 2020-12-10 12:50 GMT

சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து அவரது உடல் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், அவரது மரணத்தில் சந்தேகங்கள் வலுத்து வருவதால், அவரது பிரேத பரிசோதனை செய்யும் நேரத்தில் போலீஸ் அதிகாரி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதனிடையே தற்போது சித்ராவின் பிரேத பரிசோதனை முடிந்து விட்டது. இதனை தொடர்ந்து அவரது அண்ணனிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அவரது உறவினர் கூறினார்.

மேலும், சித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை எப்போது வெளியிடப்படும் என்ற தகவல்கள் எதுவம் வெளியாகவில்லை. நல்ல நடிகையை இழந்துவிட்டதாக சக நடிகர்கள் கண்ணீர் மல்க கூறிவருகின்றனர்.
 

Similar News