வரிகட்டாமல் நீதிமன்றத்தை அணுகிய நடிகர் விஜய்க்கு ஆதரவு கொடுக்கும் சீமான்.!

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் இறக்குமதிக்கு நுழைவு வரி வசூல் செய்வதற்கு தடைக்கோரி, நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை உயர் நீதிமன்றம், ஒரு லட்சம் ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு செலுத்தவும் உத்தரவு பிறப்பித்தது.;

Update: 2021-07-15 08:09 GMT

ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் இறக்குமதிக்கு நுழைவு வரி வசூல் செய்வதற்கு தடைக்கோரி, நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய சென்னை உயர் நீதிமன்றம், ஒரு லட்சம் ரூபாயை கொரோனா நிவாரண நிதிக்கு செலுத்தவும் உத்தரவு பிறப்பித்தது.

கடந்த 2012ம் ஆண்டில் நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்க்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். நுழைவு வரி கட்டுவது ஒவ்வொருவரின் கடமையும் ஆகும் என்று கூறி வந்தனர். ஒரு சிலர் விஜய் வரி கட்டாமல் இருப்பதற்கும் ஆதரவு தெரிவித்து வந்தனர். 


அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில்: அன்புத்தம்பி விஜய்! அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது!

துணிந்து நில்! இது அவதூறுதானே ஒழிய, குற்றம் இல்லை!

பொதுவாக அரசாங்கத்தை ஏமாற்ற நினைக்கும் எவரும் நீதிமன்றத்தை நாடமாட்டார்கள்.

உண்மையே உணராமல் வழக்கு தொடர்ந்த ஒரே காரணத்திற்காக விஜய்யை குற்றவாளிபோல சித்தரிப்பா?

தொடர்ந்துசெல்! ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு என்று உன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல மிகுந்த உளஉறுதியோடு முன்னேறி வா தம்பி!

இவ்வாறு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Similar News