செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, சுனில் இணையும் பெரிய படம்

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக ரசிகர்களின் வரவேற்பை கிட்டத்தட்ட 20 வருடங்களாக பெற்று வருபவர் இயக்குனர் செல்வராகவன்.

Update: 2023-01-26 12:24 GMT

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனராக ரசிகர்களின் வரவேற்பை கிட்டத்தட்ட 20 வருடங்களாக பெற்று வருபவர் இயக்குனர் செல்வராகவன். இருப்பினும் எஸ் ஜே சூர்யா மற்றும் தனுஷ் வைத்து அவர் கடைசியாக இயக்கிய படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஆனால் செல்வராகவன் கடந்த வருடம் வெளியான பீஸ்ட் மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்கள் மூலம் தன்னை ஒரு நடிகனாக உருமாற்றிக் கொண்டார்.

அவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பும் பாராட்டுகளும் இரண்டு படங்களிலும் கிடைத்தது. இந்நிலையில் பகாசுரன் என்கின்ற படம் இயக்குனர் மோகன்ஜி இயக்கத்தில் உருவாகி வருகிறது அப்படத்தின் முக்கிய இடத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் சுனிலும் நடிக்கிறார் என்று சமீபத்தில் அவரது கதாபாத்திர போஸ்டரும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஒரு முக்கிய வேடத்தில் செல்வராகவும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது, அதிகாரப்பூர்வமான தகவல் இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News