சீரியல் நடிகை சித்ரா தற்கொலையில் தீடீர் திருப்பம்.!

சீரியல் நடிகை சித்ரா தற்கொலையில் தீடீர் திருப்பம்.!;

Update: 2021-01-06 13:51 GMT

திடீர் திருப்பமாக சீரியல் நடிகை சித்ரா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

சீரியல் நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ம் தேதி சென்னையை அடுத்துள்ள நசரத் பேட்டையில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத்திடம் போலீஸார் விசாரணையை நடத்தினர்.

சித்ரா திருமணமாகி இரண்டே மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் சித்ராவுடன் பணியாற்றிய சக நடிகர்கள் மற்றும், பணியாளர்கள், உறவினர்கள் என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியரும் விசாரணை நடத்தினார்.

இதனையடுத்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை போலீஸார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு வழக்கை மாற்றம் செய்து சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
 

Similar News