சென்னையில் அட்லீயுடன் ஷாருக்கான் - விறுவிறுவென நடைபெறும் 'ஜவான்' படப்பிடிப்பு
'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் இரண்டு வேடத்தில் நடித்து வரும் படம் 'ஜவான்'. இதில் அப்பாவாக நடிக்கும் ஷாரூக்கானிற்கு தீபிகா படுகோன் ஜோடியாகவும், மகனாக நடிக்கும் ஷாரூக்கானிற்கு நயன்தாரா ஜோடியாகவும் நடிக்கின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஜவான் படப்பிடிப்பு சென்னை நடைபெற உள்ளது.
சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் ஷாருக்கான் தீபிகா படுகோன் இணைந்து நடிக்க போகிறார்கள். இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள அட்லீ மற்றும் குழுவினர் சென்னை வந்து இறங்கிய விடியோக்கள் தற்போது சமூக வலை தினங்களில் வைரலாக உலா வருகிறது.